உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமடைந்த சாலையில் பராமப்பு பணி துவக்கம்

சேதமடைந்த சாலையில் பராமப்பு பணி துவக்கம்

மதுராந்தகம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனுார் சுங்கச்சாவடி முதல் அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி வரை, பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணி, நேற்று முன்தினம் துவக்கப்பட்டது.தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை, சென்னையுடன் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது.இதில், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி முதல் பரனுார் சுங்கச்சாவடி வரை தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், பல்வேறு பகுதிகளில் மழையின் காரமாக பள்ளங்கள் ஏற்பட்டது.இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் விபத்துகளில் சிக்கி வந்தன. இதையடுத்து சாலையை சீரமைக்க கோரி, தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.இதை தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே பணிக்கான பூஜை நடந்தது.இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகம் வாயிலாக, 60 கோடி ரூபாய் மதிப்பில், 50 கி.மீ., நீளமுள்ள சாலை முழுதுமாக புதுப்பிக்கப்படும். ஆறு மாதங்களுக்குள் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி