மேலும் செய்திகள்
படாளம் அருகே பஸ் மோதி நர்ஸ் பலி
19-Oct-2025
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, மின்சாரம் பாய்ந்து, உழவுக்கு பயன்படுத்தப்படும் மாடு உயிரிழந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, வள்ளுவப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி, 52; விவசாயி. நேற்று, இவருக்குச் சொந்தமான இரண்டு உழவு மாடுகளை, ஜானகிபுரம் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு, உயரழுத்த மின்சார 'ஒயர்' மிகவும் தாழ்வாக இருந்துள்ளது. எதிர்பாராத விதமாக, மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடு அதன் மீது உரசிய போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
19-Oct-2025