மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
8 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
8 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
8 hour(s) ago
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் -- தெள்ளிமேடு சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.திருக்கச்சூர், தெள்ளிமேடு, கொளத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலையில் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் அதிகளவில் நடந்து செல்வது வழக்கம். இங்குள்ள ஆபத்து கால்வாய் பகுதியில், இரவு நேரங்களில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாததால், இப்பகுதி முழுதும் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.இதுகுறித்து இப்பகுதி பெண்கள் கூறியதாவது:இந்த பகுதியில் இரவு நேரம் தெரு விளக்குகள் எரியாததால், பணி முடித்து இவ்வழியாக நடந்து செல்ல அச்சமாக உள்ளது. எனவே, சாலையோரம் தெரு விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago