| ADDED : ஜன 20, 2024 12:44 AM
இறந்த நிலையில் பூனை
மதுராந்தகம் நகராட்சியில், பழைய போலீஸ் குடியிருப்பு அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பயணியர் நிறுத்தம் பகுதியில், பொது மக்களின் தேவைக்காக குடிநீர் மினி டேங்க் அமைக்கப் பட்டு உள்ளது.இந்த மினி டேங்கின் மேல் பகுதியில் மூடி இல்லாததால், பூனை ஒன்று தவறி விழுந்து இறந்துள்ளது. பூனை இறந்து கிடப்பதை அறியாத அப்பகுதிவாசிகள், இரண்டு நாட்களாக மினி டேங்க் தண்ணீரை பயன்படுத்தி வந்துள்ளனர்.குடிநீரில் துர்நாற்றம் வீசியதால், சந்தேகம் அடைந்த மக்கள், குடிநீர் டேங்க் உள்ளே பார்த்த போது, பூனை இறந்து கிடப்பது தெரிந்தது. பின், இறந்த பூனையின் உடல் அகற்றப்பட்டது. எனவே, மூடி இல்லாத குடிநீர் மினி டேங்குகளை ஆய்வு செய்து, ப்ளீச்சிங் பவுடர் தெளித்து, சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.