உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆதார் மையத்தில் தாமதம் கூடுதல் சாதனம் பயன்பாடு

ஆதார் மையத்தில் தாமதம் கூடுதல் சாதனம் பயன்பாடு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கும் ஆதார் மையத்தில், இப்பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதியினர், பல்வேறு சேவைகள் பெறுகின்றனர்.புதிதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் மாற்றம் மற்றும் திருத்தம் ஆகியவற்றுக்காக, இங்கு ஏராளமானோர் வருகின்றனர்.அவர்களுக்கு, முறையாக டோக்கன் வழங்கப்படாமல், மீண்டும் மீண்டும் வரவழைத்து அலை கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், காலதாமதம் மற்றும் பயனாளிகளின் அலைகழிப்பை தவிர்க்க, கூடுதல் சாதனங்களை பயன்படுத்தி சேவையளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக, தாலுகா தலைமையிடத்து தாசில்தார் கணேசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை