உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடற்புழு நீக்க மாத்திரை மாணவியருக்கு வினியோகம்

குடற்புழு நீக்க மாத்திரை மாணவியருக்கு வினியோகம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாமை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார்.இந்த முகாமில் விடுபட்டோருக்கு, வரும் 16ம் தேதி நடக்கும் முகாமில், மாத்திரைகள் வழங்கப்படும். மாவட்டத்தில், 1 வயது முதல் 19 வயது வரை உள்ள, 7,09,573 குழுந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 1,85,826 பெண்களுக்கும், மாத்திரைகள் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையம், அங்கன்வாடி மையம், பள்ளிகள் மற்றும் கல்லுாரி வாயிலாக அல்பண்டசோல் மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பரணிதரன், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை