உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட வலு துாக்குதல் போட்டி அயனாவரம் நவீன் ஜிம் சாம்பியன்

மாவட்ட வலு துாக்குதல் போட்டி அயனாவரம் நவீன் ஜிம் சாம்பியன்

சென்னை : சென்னை மாவட்ட வலுத்துாக்கும் சங்கம் மற்றும் சேலஞ்ச் ஜிம் இணைந்து, மாவட்ட அளவிலான வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை, திருவொற்றியூரில் நேற்று முன்தினம் நடத்தின.இதில், 'ஸ்குவாட், பெஞ்ச் பிரிஸ், மற்றும் டெட் லிப்ட்' ஆகிய மூன்று போட்டிகளில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.அனைத்து போட்டிகளின் முடிவில், பெண்களுக்கான சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில், 71 புள்ளிகள் பெற்று, அயனாவரம் நவீன் பிட்னஸ் ஜிம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.அதேபோல், ஆடவரில் 107 புள்ளிகள் பெற்று, அமைந்தகரை எம்.கே., ஜிம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. மாஸ்டர்ஸ் பிரிவில், திருவொற்றியூர் ரகுவீர் ஜிம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.தவிர, சப் - ஜூனியரில் பிரசன்னா; ஜூனியரில் சதீஷ்; சீனியரில் விஜய்; மாஸ்டர்ஸ் ஸ்டீபன் ஆகியார் ஸ்ட்ராங் மேன் பட்டத்தை வென்றனர்.பெண்களில் சப் - ஜூனியர் மற்றும் ஜூனியரில் சுதா, சீனியர் மற்றும் மாஸ்டர் பிரிவுகளில் பூஜா 'ஸ்ட்ராங் விமன்' பட்டங்களை வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ