உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் குப்பை ஊரப்பாக்கத்தில் சீர்கேடு

சாலையோரம் குப்பை ஊரப்பாக்கத்தில் சீர்கேடு

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் நகர், சாட்சி பிள்ளையார் கோவில் அருகில், சாலையில் குப்பை கொட்டப்பட்டு, நீண்ட நாட்களாக தேங்கியுள்ளது.அதை அகற்றித் தர வேண்டி, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை தேங்கிய குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலையோரம் தேங்கியுள்ள குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ