உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தி.மு.க., கொடி கம்பம் சாய்ந்து இருசக்கர வாகன ஓட்டி காயம்

 தி.மு.க., கொடி கம்பம் சாய்ந்து இருசக்கர வாகன ஓட்டி காயம்

வண்டலுார்: வண்டலுாரில், சாலை நடுவே நடப்பட்ட தி.மு.க; கொடி கம்பம் சரிந்து, சாலையில் விழுந்தது. இதில், அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டி காயமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த மேலக்கோட்டையூர், தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கு, துணை முதல்வர் உதயநிதி, இன்று வருகிறார். இதையொட்டி, அவரை வரவேற்கும் விதமாக, வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான, சாலையின் மைய தடுப்பு சுவரில், தி.மு.க., கொடியை ஊன்றும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். இந்நிலையில், மேற்கு தாம்பரம், இரும்புலியூர், திருவள்ளூர் பிரதான சாலையை சேர்ந்த போஸ்கோ, 42, என்பவ ர், தன் யமாஹா பைக்கில், அந்த சாலையில் சென்றார். அப்போது, மதியம் 1:00 மணி அளவில், கண்டிகை அடுத்து, பாலாஜி பாலிடெக்னிக் அருகே வரும்போது, தி.மு.க.,வி னர் நட்டு வைத்திருந்த கொடி கம்பம் காற்றில் சரிந்து, போஸ்கோவின் மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய போஸ்கோ, சாலையில் விழுந்தார். இந்த விபத்தில் அவரது கால் முட்டி மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தாகூர் மருத்துவமனைக்கு சென்ற போஸ்கோ, அங்கு சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். கிளாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை