உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கியூ ஆரில் பணம் செலுத்தினால் குடிநீர் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் வசதி

கியூ ஆரில் பணம் செலுத்தினால் குடிநீர் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் வசதி

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில்,'கியூ ஆர் கோடு' வாயிலாக பணம் செலுத்தி, குறைந்த விலையில் குடிநீர் பாட்டில் பெறும் வசதி செய்யப்படுகிறது.ஆசியாவின் பெரிய பேருந்து முனையமான கிளாம்பாக்கத்திலிருந்து, வாரத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள், அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.இங்கு, குறைந்த விலையில் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், பேருந்து முனைய பராமரிப்பு நிறுவனம் சார்பில், தனியார் குடிநீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனம், 'கியூ ஆர் கோடு' வாயிலாக பணம் செலுத்தி, குடிநீர் பாட்டில் பெறும் வசதியை துவக்கி உள்ளது.அதன்படி, குளிர்சாதன பெட்டியில் 1 லி., மற்றும் 500 மி.லி., குடிநீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. அந்தப் பெட்டியின் மேல் உள்ள திரையைத் தொடும் போது, அதில் 'கியூ ஆர் கோடு' வருகிறது.அந்த 'கியூ ஆர்' கோடினை மொபைல் போன் வாயிலாக 'ஸ்கேன்' செய்து பணம் செலுத்தினால், பெட்டியின் அடிப்பகுதியில் குடிநீர் பாட்டில் வந்து விழுகிறது. இதை பயணியர் எடுத்துக் கொள்ளலாம்.இதில், 1 லி., குடிநீர் பாட்டில் 10 ரூபாய், 500 மி.லி., குடிநீர் பாட்டில் 6 ரூபாய் என்ற விலைக்கு கிடைக்கிறது. பேருந்து முனையத்தில் 14 இடங்களில் இந்த வசதி வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை