உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பிரிட்ஜ் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

 பிரிட்ஜ் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

திருப்போரூர்:பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரகலாதன். 40, இவர் திருப்போரூர் - நெல்லிக்குப்பம் சாலையில் 'ஏசி' பிரிட்ஜ், வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கடையில் தீ விபத்து ஏற்பட்டு, 200 அடி உயரத்திற்கு புகை மூட்டம் கிளம்பியது. கடை அருகே இருந்த டைப்பிங் சென்டர் , இருசக்கர வாகன வாட்டர் வாஷ் கடை, டீ கடை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடத்தில் இருந்தவர்கள் அலரி அடித்து வெளியேறினர். தகவல் அறிந்து வந்த காலவாக்கம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதில், 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின. இந்த தீவிபத்தால் அருகே இருந்த டீ கடை மற்றும் உடற்பயிற்சி கூடத்தின் கண்ணாடி உடைந்து சேதமானது. காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். --------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ