மாடு மீது ஆட்டோ மோதி மீனவர் பலி
கூவத்துார்:கூவத்துாரில் மாடு மீது ஷேர்- ஆட்டோ மோதி மீனவர் உயிரிழந்தார். கூவத்துார் அடுத்த கடலுார் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர், 55, மீனவர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கூவத்துாரில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு, ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பினார். கடலுார் மேகாத்தம்மன் கோவில் அருகே சென்ற போது, திடீரென மாடு குறுகே வந்ததால் ஷேர் ஆட்டோ மாடு மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சேகர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சரத்குமார் பலத்த காயமடைந்தனர்.இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்று இரவு 10:00 மணியளவில் சேகர் உயிரிழந்தார். கூவத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.