உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடப்பாக்கத்தில் தீ விபத்து மீன்பிடி வலை எரிந்து நாசம்

கடப்பாக்கத்தில் தீ விபத்து மீன்பிடி வலை எரிந்து நாசம்

செய்யூர்: செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்தவர் வேல்பழனி, 55. மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.வழக்கம் போல, கடற்கரை ஓரத்தில் குடிசை அமைத்து, தனக்கு சொந்தமான மீன்பிடி வலைகளை வைத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்றுள்ளார்.இரவு 11:30 மணிக்கு, மர்மமான முறையில் குடிசை தீப்பற்றி எரிந்தது. அருகே இருந்தவர்கள், இதுகுறித்து வேல்பழனிக்கு தகவல் அளித்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.காற்று பலமாக வீசியதால், தீ வேகமாக பரவி, குடிசைக்குள் வைக்கப்பட்டு இருந்த ௫ லட்சம் ரூபாய் மதிப்புடைய மீன்பிடி வலை முழுதும் எரிந்து நாசமானது.இது குறித்த புகாரின்படி, சூணாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்