உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சொத்து தகராறில் தந்தையை வெட்டிய மாஜி ராணுவ வீரர்

சொத்து தகராறில் தந்தையை வெட்டிய மாஜி ராணுவ வீரர்

உத்திரமேரூர், உத்திரமேரூரில், சொத்து தகராறில் தந்தையை வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் பேரூராட்சி, ராகவ நாட்டார் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன், 75. இவரது மகன்கள் முருகன், 48, ராஜேஷ், 42. மகள் கவிதா, 40. கண்ணப்பன், பட்டஞ்சேரி பகுதியில் உள்ள மகள் கவிதா வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், உத்திரமேரூரில் உள்ள தன் வீட்டை, மகளுக்கு எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது இளைய மகனான முன்னாள் ராணுவ வீரர் ராஜேஷ், நேற்று முன்தினம் மதியம் பட்டஞ்சேரிக்கு சென்று கண்ணப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தந்தையின் தலையில் வெட்டினார். தடுக்க வந்த கவிதாவின் கையிலும் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த உத்திரமேரூர் போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !