உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

செங்கல்பட்டு:கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ், 29, இவர் கடந்த 21ம் தேதி செங்கல்பட்டு நகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். தகவலறிந்த செங்கல்பட்டு நகர போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நரேஷ் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சாய் பிரணீத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். புழல் சிறையில் உள்ள, நரேஷிடம், குண்டர் சட்ட நகலை போலீசார் வழங்கி, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை