உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேலக்கோட்டையூரில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: கலெக்டர் ஆய்வு

மேலக்கோட்டையூரில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: கலெக்டர் ஆய்வு

வண்டலுார்:மேலகோட்டையூரில், 'கேலோ' இந்தியா விளையாட்டு நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், , உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த, மேலக்கோட்டையூரில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை உள்ளது.இங்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம், கேலோ இந்தியா யூத் கேம்ஸ் போட்டிகள், இன்று துவங்கி, 31ம் தேதி வரை நடக்கின்ளறன. இந்த போட்டியில், சைக்கிளிங், இறகுபந்து, குத்துச்சண்டை, வாள் வீச்சு, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.மேற்கண்ட போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் வாகன நிறுத்தம் இடங்களை, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், நேற்று, ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க, விளையாட்டுத் துறை மற்றும் அதிகாரிகளுக்கு, உத்தரவிட்டார்.

சாலை புதுபொலிவு

இந்த போட்டியில் பங்கேற்க, தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, விளையாட்டு வீரர்கள் வருகின்றனர்.இதனால், வண்டலுார் -- கேளம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலைத் துறை சாலை சீரமைக்கபட்டு, சாலை தடுப்புக்களில், பூச்செடிகள் அமைக்கப்பட்டு, புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை