உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமி கர்ப்பம்: கணவருக்கு போக்சோ

சிறுமி கர்ப்பம்: கணவருக்கு போக்சோ

மேல்மருவத்துார்:அச்சிறுபாக்கம் அருகே உள்ள கீழ்அத்தி வாக்கம் கிராமம், இருளர் குடியிருப்பைச் சேர்ந்த முத்து, 22, என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார்.இந்நிலையில், சிறுமி கர்ப்பமானார். இது, உறவினர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அச்சிறுமியை, முத்துவிற்கு திருமணம் செய்து வைத்தனர்.நேற்று முன்தினம், செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மகப்பேறு பரிசோதனைக்காக அச்சிறுமி சென்றுள்ளார்.மருத்துவர்கள் பரிசோதனையில், 16 வயது சிறுமி என தெரியவந்தது. உடனே, செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.இத்தகவலின்படி, அவரது கணவர் மீது, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விழிப்புணர்வால் வெளிச்சம் வருமா?

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்த சிறுமியர், பாலியல் குற்றங்களில் அதிகம் பாதிப்படைகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால், குறைந்த வயதில் கர்ப்பம் தரிப்பதால், மகப்பேறு காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படுதல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் பிறக்கின்றன.மேலும், குறைந்த வயதில் திருமணம் செய்வதால், அரசின் நலத்திட்டங்கள் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார், அனைத்து மகளிர் போலீசார், ஊராட்சி தலைவர்கள் சேர்ந்து, இருளர் பகுதி மக்கள் நிறைந்து வாழும் பகுதிகளில், பாலியல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை