உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்; 4 பேர் கைது

ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்; 4 பேர் கைது

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தாழம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, தாழம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, பொன்மார் அருகே குட்கா பொருட்களை சிலர் லோடு வேன்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றிவளைத்த போலீசார், வாகனங்களுடன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருப்போரூர் அடுத்த தாழம்பூர் ஜெய்பீம் நகரைச் சேர்ந்த செல்வம் பீட்டர் சேசு, 32, மயிலாடுதுறையைச் சேர்ந்த சரவணன், 26, தரமணியைச் சேர்ந்த நவீன்குமார், 25, கண்ணகி நகரைச் சேர்ந்த எட்வீன் ராஜ், 20, என தெரிந்தது. மேலும், இந்த குட்கா பொருட்களை பெங்களூரிலிருந்து கடத்தி வந்து, பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 20 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் மூன்று லோடு மினி வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை