வீடு புகுந்து மொபைல் திருட்டு
மறைமலை நகர், தென்காசி அடுத்த பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா, 23. மறைமலை நகர் பெரியார் தெருவில், வாடகை வீட்டில் தங்கி, மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தனது விவோ மொபைல் போனை தன் அறையில் வைத்து விட்டு துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் மொபைல் போனை திருடிச் சென்றார்.நேற்று காலை, பிரேமா எழுந்து பார்த்த போது, மொபைல் போன் திருடப்பட்டது தெரிந்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.