உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நத்தம் கரியச்சேரி, நல்லுார் பள்ளி கட்டடங்கள் திறப்பு

நத்தம் கரியச்சேரி, நல்லுார் பள்ளி கட்டடங்கள் திறப்பு

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த நத்தம் கரியச்சேரி, நல்லுார் ஆகிய பகுதிகளில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் போதிய வகுப்பறை இல்லாததால், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, இப்பகுதியினர் வலியுறுத்தினர்.சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், அதன் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், அப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட பரிந்துரைத்து, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, தலா 63 லட்சம் ரூபாய் மதிப்பில், இப்பள்ளிகளில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. நேற்று நடந்த விழாவில், அணுமின் நிலைய இயக்குனர் சுதிர் பி.ஷெல்கே, அவற்றை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி