உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  குடிநீர் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

 குடிநீர் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், தேர்வாய் கண்டிகை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரிகள், 11.7 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மழை தீவிரம் அடையும் என்பதால், பூண்டியில் இருந்து வினாடிக்கு, 2,077 கனஅடி; புழலில் 1,709 கனஅடி; செம்பரம்பாக்கத்தில் 1,394 கனஅடி நீரும் திறக்கப்பட்டு உள்ளது. தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 0.50 டி.எம்.சி.,யில் 0.43 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை