மதுராந்தகம்:அரசின் அனைத்து நல திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை, கடந்தாண்டு நவம்பரில் முதல்வர் அறிவித்தார்.அதன்படி, ஒவ்வொரு தாலுகாவிலும், மாதத்தின் நான்காவது புதன்கிழமை கலெக்டர் தலைமையில் முகாம் நடைபெறும். அன்று காலை 9:00 முதல் மறுநாள் காலை 9:00 மணி வரை மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும்.அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தாலுகாவில், வரும் 21ம் தேதி கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.இந்நிகழ்விற்கு முன்னோட்டமாக, நேற்று மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட பிர்க்காவில், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' நிகழ்வு நடந்தது.இதில், ஓணம்பாக்கத்தில்- 20, மதுராந்தகம் -- 8, ஜமீன் எண்டத்துார்- - 4, கருங்குழி -- 7, எல்.எண்டத்துார் -- 10, ஒரத்தி- - 25, பெரும்பாக்கம்- - 6, வையாவூர்- - 2 மற்றும் அச்சிறுபாக்கம் -- 2 என, மொத்தம் 84 மனுக்கள் பெறப்பட்டன.இதில், போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தாததால், மக்களிடமிருந்து மனுக்கள் வரப்படவில்லை.வரும் காலங்களில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.