மேலும் செய்திகள்
நாளைய மின் தடை
5 minutes ago
இன்று இனிதாக
6 minutes ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் வார்டுகளின் எண்ணிக்கையை, 15ல் இருந்து, 22 ஆக உயர்த்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டு உள்ளது. பல்லவர் கால சிற்பங்கள் அமைந்துள்ள, சர்வதேச பாரம்பரிய சுற்றுலா இடமாக மாமல்லபுரம் நகராட்சி உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ், கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பு நிலை பேரூராட்சியாக மாமல்லபுரம் செயல்பட்டு வந்தது. மாமல்லபுரம், வெண்புருஷம், தேவனேரி, பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம் ஆகிய பகுதிகள் உள்ளன. தற்போது சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும் நிலையில், இப்பகுதியை மேம்படுத்த கருதி, இரண்டாம் நிலை நகராட்சியாக, கடந்த பிப்., மாதம் தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சி நிர்வாக பகுதியில், 30,000 பேர் வசிக்க வேண்டும். ஆனால், 15 வார்டுகளே அமைந்துள்ள மாமல்லபுரத்தில், 20,000க்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். ஆனால் சுற்றுலா சிறப்பு, மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த கருதியே, மாமல்லபுரம் நகராட்சியாக மாற்றப்பட்டது. நகராட்சியாக மாற்றப்பட்டு, 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், நிர்வாகத்திற்கு வரிகள் வருவாய், கூடுதல் மக்கள் தொகை கருதி, அருகிலுள்ள ஊராட்சிப் பகுதிகளையும் இணைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வார்டுகளின் எண்ணிக்கையை, 15ல் இருந்து, 22 ஆக உயர்த்தி உத்தரவிட்டு, தமிழக அரசு அரசிதழில், தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
5 minutes ago
6 minutes ago