உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுக்கூடத்தில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

மதுக்கூடத்தில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

திருப்போரூர், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 37; இ- - சேவை மையம் நடத்தி வருகிறார்.இவர் நேற்று முன்தினம், வேங்கடமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில், மது அருந்தினார்.அப்போது, அதே ஊராட்சியைச் சேர்ந்த பிரபு, 34, என்பவர் மது அருந்த வந்துள்ளார். திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிரபு பீர் பாட்டிலால் ரஞ்சித்குமாரின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே, அங்கிருந்தோர் பிரபுவை பிடித்து, தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாழம்பூர் போலீசார், பிரபுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.இதில், இருவருக்கும் முன்விரோதம் இருந்ததால், ரஞ்சித்குமாரை மது போதையில், பிரபு பீர் பாட்டிலால் தாக்கியது தெரிந்தது.இதற்கிடையில், ரஞ்சித்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிரபு மீது புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். அதேபோல், பிரபு அளித்த புகாரின்படி, ரஞ்சித்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை