உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கத்தியை காட்டி மிரட்டி துணி கடையில் பணம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி துணி கடையில் பணம் பறிப்பு

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர் ஊராட்சி, காரணை பேருந்து நிறுத்தம் அருகே, துணிக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் இரண்டு பைக்கில், மர்ம நபர்கள் மூன்று பேர் துணிக்கடைக்கு வந்துள்ளனர். துணி வாங்குவது போல் பேச்சு கொடுத்து நோட்டமிட்டுள்ளனர். அப்போது கடையில், உரிமையாளர் சுரேந்தர், 22, என்பவர் மட்டும் இருந்துள்ளார். அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய மர்ம கும்பல், கல்லா பெட்டியில் இருந்த 15,000 ரூபாய், கடையில் இருந்த துணிகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. இதுகுறித்து சுரேந்தர், தாம்பரம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி, தாழம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை