மேலும் செய்திகள்
பயன்பாட்டிற்கு வரும் முன் சேதமான மயான எரிமேடை
27-Jun-2025
அச்சிறுபாக்கம்:எலப்பாக்கம் -- ஆனைக்குன்னம் இடையே புதிதாக சீரமைக்கப்பட்ட தார்ச்சாலை சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.எலப்பாக்கத்தில் இருந்து ஆனைக்குன்னம் வழியாக ஒரத்தி வரை செல்லும், மாநில நெடுஞ்சாலை உள்ளது.அதில், எலப்பாக்கம் -- ஆனைக்குன்னம் இடையே உள்ள 2 கி.மீ., துாரம் கொண்ட சாலை கடுமையாக சேதமடைந்து, வாகனங்கள் பயன்படுத்த முடியாதபடி குண்டும் குழியுமாக இருந்தது.இதையடுத்து, கடந்த ஏப்ரலில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இச்சாலை அவசர கதியில் சீரமைக்கப்பட்டது.தற்போது, மூன்றே மாதத்தில், இந்த சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் விரிசல் ஏற்பட்டு, பள்ளங்கள் உருவாகி உள்ளன.பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட தார்ச்சாலை, மீண்டும் சேதமடைந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கலெக்டர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-Jun-2025