மேலும் செய்திகள்
சாலை விபத்துகளில் இரண்டு பேர் பலி
14-Aug-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த தேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில், குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலையில், 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' மொபெட்டில் சென்றார். அப்போது, மாடு ஒன்று குறுக்கே வந்து, இவரது ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில், ரவி தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். சிங்கபெருமாள் கோவில், பாரேரி பகுதியிலுள்ள அரசு அவசர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணி யளவில் உயிரிழந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Aug-2025