உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள் வல்லம் பகுதியில் பாதசாரிகள் அவதி

 சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள் வல்லம் பகுதியில் பாதசாரிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மீன் கடைகள் உள்ளிட்ட கடைகளை அகற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில், வல்லம் கிராமம் உள்ளது. இங்குள்ள, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில், அணுகுசாலையை ஆக்கிரமித்து, மீன் கடைகள் உள்ளிட்ட கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், அணுகுசாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல், சாலையில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. மேலும், விபத்து அச்சத்துடன் பாதசாரிகள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக, தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி மீன் கழிவுகள், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படுவதால், குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படுகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், கலெக்டர் சினேகாவிடம் மனு அளித்தனர். இந்த மனு மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தாததால், சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை