மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
7 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
11 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
11 hour(s) ago
பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், ஜமீன் பல்லாவரம், சுபம் நகர் 3ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.நீரோட்டத்திற்கு ஏற்ப குழாய் பதிக்கப்படாததால், அடிக்கடி பாதாள சாக்கடையிலிருந்து கழிவு வெளியேறுகிறது.அன்னை அஞ்சுகம் தெருவில், பாதாள சாக்கடை கழிவு வழிந்து ஆறாக ஓடுவதும், சில நாட்கள் கழித்து தானாக நின்று விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. நான்கு ஆண்டுகளாக இப்பிரச்னை நீடிப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.ஒவ்வொரு முறையும் வழிந்தோடும் பாதாள சாக்கடை, அருகேயுள்ள மூவரசம்பேட்டை ஏரியில் கலக்கிறது.நான்கு ஆண்டுகளாக கலப்பதால், ஏரி தண்ணீரும் நாசமடைந்துவிட்டது. இதற்கு, மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையே காரணம் என கூறப்படுகிறது.மற்றொருபுறம், இப்பிரச்னையால் அப்பகுதியில் கொசு தொல்லையும், துர்நாற்றமும் அதிகரித்து, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதோடு, தொற்று நோயும் பரவி வருகிறது. இப்படியே போனால், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, திரும்பிய இடமெல்லாம் பாதாள சாக்கடை கழிவாகவே இருக்கும்.எனவே, மாநகராட்சி கமிஷனர் இப்பிரச்னையில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago