உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இடைக்கழிநாடு பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

இடைக்கழிநாடு பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நடந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்களின் குறைகளை உரிய ஆவணங்களோடு சமர்ப்பித்தனர்.முகாமில் வருவாய், பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, எரிசக்தி, மின்சார வாரியம், போலீசார், மாற்றுத் திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை உட்பட 13 துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில் பொது மக்களிடம் இருந்து 1,126 மனுக்கள் பெறப்பட்டு துறை வாரியாகசமர்பிக்கப்பட்டது. இம்மனுக்கள் மீது, 30 நாட்களில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி