உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரியவெளிக்காடு சாலை விரிவாக்கம் மரங்களை அகற்றாமல் தவிர்க்க முடிவு

பெரியவெளிக்காடு சாலை விரிவாக்கம் மரங்களை அகற்றாமல் தவிர்க்க முடிவு

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே முதுகரை முதல் கூவத்துார் வரையிலான 25 கி.மீ., தார் சாலை உள்ளது. இது, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இப்பகுதியில் இயங்கும் கல் குவாரிகளுக்கு வந்து செல்லும் லாரிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேலகண்டை முதல் பெரியவெளிக்காடு கிராமங்களுக்கு இடையேயான 3 கி.மீ., சாலையில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.இதையடுத்து, சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, நெடுஞ்சாலைத் துறை சார்பாக டெண்டர் விடப்பட்டு, சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.ஏற்கனவே உள்ள சாலையின் மொத்த அகலம் 7 மீட்டர். இரண்டு புறங்களிலும், தலா 1.5 மீட்டர் என, 3 மீட்டர் சாலை விரிவாக்கம் செய்து, மொத்தம் 10 மீட்டர் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றாமல், அந்த பகுதியில் மட்டும் 2 மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை