உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  க ன் டெய் னர் - டாரஸ் மோதி விபத்து துரிதமாக செயல்பட்ட போலீசார்

 க ன் டெய் னர் - டாரஸ் மோதி விபத்து துரிதமாக செயல்பட்ட போலீசார்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி., சாலையில், லாரியின் பின்பக்கம் டாரஸ் லாரி மோதிய நிலையில், போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டதால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, போக்குவரத்து போலீசார், பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 4:30 மணியளவில், தாம்பரம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, திடீரென 'பிரேக்' அடித்து நின்றது. அப்போது, பின்னால் வந்த 'டாரஸ்' லாரி, அதன் மீது மோதியது. கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர், எதுவும் நடக்காதது போல், லாரியை ஓட்டி சென்றுவிட்டார். இந்த விபத்தில், 'டாரஸ்' லாரியின் முன்புற கண்ணாடிகள் நொறுங்கி சாலையில் விழுந்தன. இதையடுத்து, லாரியை இயக்க ஓட்டுநர் முற்பட்ட போது, பழுதானது தெரிந்தது. இதைக் கண்ட போக்குவரத்து போலீசார், துரித கதியில் செயல்பட்டு, இரு 'பொக்லைன்' இயந்திரங்களை வரவழைத்து, 'டாரஸ்' லாரியை, சாலை ஓரமாக நகர்த்தினர். இதனால், பெரும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. சாமர்த்தியமாக செயல்பட்ட போலீசாரை வாகன ஓட்டிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை