உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொங்கல் விழா டிராக்டர் கவிழ்ந்து 9 மாணவர்கள் காயம்

பொங்கல் விழா டிராக்டர் கவிழ்ந்து 9 மாணவர்கள் காயம்

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த, காட்டாங்கொளத்துார் ஜி.எஸ்.டி., சாலை அருகில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மைதானத்தில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி மாணவர்கள் 20 பேரை டிராக்டர் வாகனத்தில் உட்கார வைத்து மைதானத்தில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதில் மைதானத்தில் இருந்த கற்கள் குத்தி 9 மாணவர்களுக்கு கை, கால், முகத்தில் காயம் ஏற்பட்டது. பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி