மேலும் செய்திகள்
கைதான வழக்கறிஞர்களை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
15-Aug-2025
சென்னை, வழக்கறிஞரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னை, வியாசர்பாடி, பி.வி.காலனி, 11வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 30; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர், நேற்று மீனாம்பாள் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் மது அருந்தினார். அங்கு வந்த மர்ம நபர், தினேஷ்குமாரின் கன்னத்தில் சரமாரியாக தாக்கினார். இதில், நிலை குலைந்த தினேஷ்குமாரின் பாக்கெட்டில் இருந்து, 600 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். இதில், தினேஷ்குமாரை தாக்கியது, வியாசர்பாடி, 'சி' கல்யாணபுரத்தைச் சேர்ந்த ரவுடி அரவிந்த், 33, என்பது தெரிய வந்தது. வியாசர்பாடி காவல் நிலையத்தில், இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தன் வழக்கு சம்பந்தமாக ஆஜராக, வழக்கறிஞர் தினேஷ்குமாருக்கு ஒரு மாதத்திற்கு முன், அரவிந்த் 50,000 ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை வழக்கு விசாரணைக்கு தினேஷ்குமார் ஆஜராகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், மதுக்கூடத்தில் மது அருந்தி கொண்டிருந்த தினேஷ்குமாரை தாக்கியது தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
15-Aug-2025