உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கனமழையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

கனமழையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 'மிக்ஜாம்' புயலால் பெய்த கனமழையில், திருக்கழுக்குன்றம் அடுத்த அகஸ்தீவரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பரிபூரணம், 65, திருப்போரூர் அடுத்த, வளவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சகாயராஜ், 40, தையூர் அன்பழகன், 55, பல்லாவரம் அடுத்த அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய் கண்ணன், 29, ஆகியோர் உயிரிழந்தனர்.இவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க, தலா 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. அதன்பின், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், இறந்தவர்களின் உறவினர்களுக்கு, 5 லட்சம்ரூபாய்க்கான காசோலைகளை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று முன்தினம் வழங்கினார்.இதில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கலெக்டர் ராகுல்நாத், சப்- - கலெக்டர் நாராயண சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை