உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சிறுவர் விளையாட்டு மையத்தில் இடையூறாக இருந்த ஜல்லி அகற்றம்

 சிறுவர் விளையாட்டு மையத்தில் இடையூறாக இருந்த ஜல்லி அகற்றம்

திருப்போரூர்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், திருப்போரில் சிறுவர் விளையாட்டு மையத்தில் இடையூறாக இருந்த ஜல்லி கற்கள் அகற்றப்பட்டு, மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சியில் கிரிவல சாலை, வனத்துறை அலுவலகம் அருகே, சிறுவர் விளையாட்டு மையம் உள்ளது. இந்த விளையாட்டு மையத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் விளையாடி வருகின்றனர். இங்கு ஜல்லி கற்கள் பரவி இருந்ததால், சிறுவர்கள் விளையாடும் போது காலில் குத்தி அவதிப் பட்டனர். இதுதொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மேற்கண்ட விளையாட்டு மையத்தில் இடையூறாக இருந்த ஜல்லி கற்கள் அகற்றப்பட்டன. பின், 'எம் - சாண்ட்' கொட்டி சமன் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை