உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை 

சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை 

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, கண்ணகப்பட்டு மடம் தெருவில், வேலாயுத தீர்த்த குளம் வடக்கு புறத்தில் மின்கம்பம் உள்ளது. இங்கு 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த மின்கம்பம் அடிப்பாகம் உட்பட மேல்பாகம் வரை மிகவும் மோசமாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இது பொதுமக்களின் மீது சாய்ந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும். எனவே, விபத்து ஏற்படும் முன் புதிய மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் கூறுகையில், மக்கள் நடமாட்டம் மற்றும் குடியிருப்புகள் ஒட்டி மின்கம்பம் மோசமான நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் மின்கம்பம் சாயும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி