உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை

செய்யூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை

செய்யூர்:செய்யூர் - -சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் பஜார் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், அரசு பள்ளிகள், கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. சூணாம்பேடு, வெடால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர், பல்வேறு பணிகளுக்காக செய்யூருக்கு வந்து செல்கின்றனர். ஆனால், செய்யூர் -- சூணாம்பேடு இடையே டவுன் பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இருசக்கர வாகனம் கூட இல்லாதவர்கள், அந்த வழியாகச் செல்லும் வாகனங்களில், 'லிப்ட்' கேட்டு சென்று வருகின்றனர். எனவே, செய்யூர் - -சூணாம்பேடு இடையே, வெடால் வழியாக டவுன் பஸ் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ