உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எலும்புக்கூடாக மாறிய மின்கம்பம் மேட்டுத்தண்டலம் வாசிகள் பீதி

எலும்புக்கூடாக மாறிய மின்கம்பம் மேட்டுத்தண்டலம் வாசிகள் பீதி

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தண்டலம் கிராமத்தில், கண்ணதாசன் தெரு உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பம் முழுமையாக சேதமடைந்து, தற்போது எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது. மின்கம்பத்தின் சிமென்ட் பூச்சு முழுதும் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இரும்பு கம்பியும் துருப்பிடித்து, எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.மேலும், பழுதடைந்த மின்கம்பங்களில் உயரழுத்த மின்கம்பிகள் செல்வதால், கம்பம் உடைந்தால், பெரியளவில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த சேதமடைந்த மின்கம்பத்தில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் தான் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.எனவே, குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள பழுதடைந்த மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை