உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலைகள் தொழுப்பேடு ஊராட்சியில் அவலம்

20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலைகள் தொழுப்பேடு ஊராட்சியில் அவலம்

தொழுப்பேடு:தொழுப்பேடு ஊராட்சியில், 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு ஊராட்சியில், 6 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 150க்கும் மேற்பட்ட தெருக்களில், 1,800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் தெருவில், 300 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள சாலைகள், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அதன் பின், சாலைகளை சீரமைக்கவில்லை. தற்போது, அம்பேத்கர் தெரு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது: அம்பேத்கர் நகரில், பட்டியலின மக்கள் தான் வசிக்கின்றனர். இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும், விரிசல் அடைந்து மோசமான நிலையில் உள்ளன. பல இடங்களில், நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளன. இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. கடந்த செப்., 1ம் தேதி, கலெக்டரிடம் மனு அளித்தும், இன்று வரை நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள்ஆய்வு செய்து, அம்பேத்கர் நகர் சாலைகளை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை