உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஸ்கூட்டர் சீட்டில் வைத்த ரூ.1.66 லட்சம் ஆட்டை

 ஸ்கூட்டர் சீட்டில் வைத்த ரூ.1.66 லட்சம் ஆட்டை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி, வணிகர் தெருவைச் சேர்ந்தவர் ஜெனித் யுவராஜ், 36. இவர் நேற்று மதியம் 1:00 மணியளவில், திருப்போரூர் கனரா வங்கியில் நகையை அடமானம் வைத்து பெற்ற, 1.66 லட்சம் ரூபாயை, தன் 'டியோ' ஸ்கூட்டர் பெட்டியில் வைத்துகொண்டு, வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். வழியில், ஓ.எம்.ஆர்., சாலையிலுள்ள ஒரு மளிகை கடை முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, சாவியை எடுக்காமல் மறந்து கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் பெட்டியை திறந்து, பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். இதை கவனிக்காத ஜெனித் யுவராஜ், வீட்டிற்குச் சென்று வண்டியில் பார்த்த போது, பணப்பை திருடு போனது தெரிந்துள்ளது. மளிகை கடை பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, மர்ம நபர் பணத்தை திருடியது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை