உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் சாந்திகிரி ஆசிரமத்தில் வெள்ளி விழா கொண்டாட்டம்

செய்யூர் சாந்திகிரி ஆசிரமத்தில் வெள்ளி விழா கொண்டாட்டம்

செய்யூர்: செய்யூர் சால்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள சாந்திகிரி ஆசிரமத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.காலை 10 மணிக்கு, பிரார்த்தனை மண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி, நேற்று நடந்த பொதுக்கூட்டத்தை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்று துவக்கி வைத்தார்.விழாவில், கேரள உணவுத் துறை அமைச்சர் அனில், மிசோரம் முன்னாள் கவர்னர் ராஜசேகரன்,திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் பலர் பங்கேற்றனர்.சித்த மருத்துவக் கல்லுாரி வாயிலாக, இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. வெள்ளி விழாவில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி