உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பையனுார் சாலை பணி மந்தம் வாகன ஓட்டிகள் தவிப்பு

 பையனுார் சாலை பணி மந்தம் வாகன ஓட்டிகள் தவிப்பு

தி ருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய பையனுார் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. ஆரம்பத்தில் பணிகள் வேகமாக நடந்த நிலையில், அடுத்தடுத்து வேகம் குறைந்துள்ளது. சாலையில், ஜல்லி கற்கள் கொட்டி சமன்படுத்திய நிலையில், அடுத்தகட்ட பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், இந்த சாலையில் நடக்க முடியாமலும், வாகனத்தை இயக்க முடியாமலும் விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். எனவே, விரைவாக சாலை பணிகளை முடித்து, தடையில்லாத போக்குவரத்துக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - என்.பாண்டியராஜன், பையனுார் கிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி