உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வலு தூக்குதல் போட்டி: சென்னை வீரர்கள் அசத்தல்

வலு தூக்குதல் போட்டி: சென்னை வீரர்கள் அசத்தல்

சென்னை:ஆந்திராவில் நடந்த தென்னிந்திய அளவிலான வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தினர்.ஆந்திர பிரதேசம் வலுத்துாக்கும் சங்கம் சார்பில், தென்னிந்திய அளவிலான வலு துாக்கும் போட்டி, ஆந்திராவில் கடந்த 19ல் துவங்கி 21ல் நிறைவடைந்தது. இதில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் இருபாலருக்கும் நடந்தது. போட்டியில், தென்னிந்திய அளவில் 500க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும், 'பெஞ்ச் பிரஸ்' மற்றும் 'டெட் லிப்ட்' மற்றும் 'ஸ்குவாட்' ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.அனைத்து போட்டிகள் முடிவில், சப் - ஜூனியர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் நிர்மல் வெற்றி பெற்று தங்கம் வென்றனர். ஜூனியர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி வெண்கலம் பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில் சென்னை வீரர் பிரதாப் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனையரை தமிழ்நாடு வலு துாக்கும் சங்கத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ