உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  புத்தக கடையில் திடீர் தீ விபத்து

 புத்தக கடையில் திடீர் தீ விபத்து

பெரியமேடு:: பெரியமேடு பகுதியில்: சூளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. இவருக்குச் சொந்தமான பெரியமேடு அல்லிக்குளத்தில் உள்ள 5 பழைய புத்தக கடைகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதிமக்கள் உடனடியாக வேப்பேரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வேப்பேரி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 5 கடைகளில் வைக்கப்பட்டிருந்த பழைய புத்தகங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. விபத்து குறித்து ஆராய்ந்ததில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ