| ADDED : ஜன 13, 2024 12:54 AM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே பூரியம்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.மதுராந்தகம்- - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து, பூரியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும், 800 மீட்டர் நீள தார்ச்சாலை உள்ளது.சாலை பழுதடைந்ததால், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கின.இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக, ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டு, சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.பின், பாதியில் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணி குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, உடனடியாக சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்து சாலை பயன்பட்டிற்கு கொண்டுவரப்பட்டது.