உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மேல்மருவத்துார் கோவிலுக்கு வந்த பெங்களூரு முதியவர் மாயம்

 மேல்மருவத்துார் கோவிலுக்கு வந்த பெங்களூரு முதியவர் மாயம்

மேல்மருவத்துார்: கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன், 65. இவர், நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து, இருமுடி கட்டிக் கொண்டு வந்த 50 பேர் கொண்ட குழுவுடன், மேல்மருவத்துார் கோவிலுக்கு வந்துள்ளார். பின், நேற்று காலை சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதன் பின், காலை 11:00 மணியளவில், அங்குள்ள வாகன நிறுத்தம் அருகே காணாமல் போயுள்ளார். உடன் வந்த நபர்கள், மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் இதுகுறித்து, புகார் அளித்துள்ளனர். புகாரின்படி வழக்கு பதிவு செய்த மேல்மருவத்துார் போலீசார், காணாமல் போன நரசிம்மனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை