உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் தலைமறைவு

ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் தலைமறைவு

பெரம்பூர்:ஆடு வாங்கி தருவதாக, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பெரம்பூர், ஆனந்தவேல் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 55. கடந்த 30 ஆண்டுகளாக, ஆடு வியாபாரம் செய்து வருகிறார். கடந்தாண்டு சையத் ஷக்கீல் என்பவரிடம், ஆடு வாங்க 10 லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.ஆனால், இன்று வரை ஆடு வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித்தராமலும் இழுத்தடித்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில், செம்பியம் போலீசார் தலைமறைவாக உள்ள சையத் ஷக்கீல், 45, என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ