உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கொடூர் சாலையை சீரமைக்க வேண்டும்

 கொடூர் சாலையை சீரமைக்க வேண்டும்

பவுஞ்சூர் அருகே கொடூர் கிராமத்தில் இருந்து சீக்கனாங்குப்பம் கிராமத்திற்குச் செல்லும் 4 கி.மீ., தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. கொடூர் சாலை சந்திப்பு அருகே சாலை சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், சாலையில் செல்லும் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.குமரேசன், பவுஞ்சூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்