மேலும் செய்திகள்
நெடுமரம் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டுகோள்
18-Oct-2024
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம் கரும்பாக்கம் கிராமத்திற்கு, தாம்பரத்தில் இருந்து, தடம் எண்: 55சி என்ற அரசு பேருந்து மேலையூர், வெங்கூர் வழியாக, 20 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது.அதேபோல், தாம்பரத்தில் இருந்து தடம் எண்: 55ஆர் என்ற பேருந்து, கொட்டமேடு வழியாக கரும்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய பாலூர் கிராமத்திற்கு இயக்கப்பட்டது.ஆனால், இரண்டு ஆண்டுகளாக, 55சி என்ற பேருந்து வெங்கூர் வரையும், 55ஆர் என்ற பேருந்து கொட்டமேடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. 2 - 3 கி.மீ., தூரமுள்ள கரும்பாக்கம், பாலூர் கிராமத்திற்கு இயக்கப்படவில்லை.எனவே, கரும்பாக்கம், பாலூர் கிராமம் வரை மீண்டும் இரு பேருந்துகளை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கரும்பாக்கம் கிராமத்தில், 2,000க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழில். பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.மேலும், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பேருந்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
18-Oct-2024